NATIONAL

பேருந்தும் காரும் மோதியதில் இருவர் பலி

10 ஜூலை 2023, 3:35 AM
பேருந்தும் காரும் மோதியதில் இருவர் பலி

சிரம்பான், ஜூலை 10: இன்று காலை 5 மணியளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் (வடக்கு திசை) கிலோமீட்டர் 285.5 இல் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் 22 பேர் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்ததாக நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு அதிகாரி, மூத்த தீயணைப்பு அதிகாரி II ஷாருடின் முகமட் டின் தெரிவித்தார்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனரும், இந்தோனேசிய பெண் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் காரில் பயணித்த இருவர் நலமாக இருப்பதாகவும் ஷாருடின் கூறினார்.

"இந்த சம்பவம் சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூருக்கு பயணித்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்துடன் புரோட்டான் வீரா கார் மோதியதில் நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது" என்று அவர் கூறினார்.

இந்த வழக்கின் முன்னேற்றங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும் என்றும் ஷாருடின் தெரிவித்தார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.