MEDIA STATEMENT

சிலாங்கூர் அரசியலில்  துரோகிகளுக்கு இடம் இல்லை - டத்தோ வீர மெகாட் சுள்கர்னையின் சவால்.

8 ஜூலை 2023, 8:20 AM
சிலாங்கூர் அரசியலில்  துரோகிகளுக்கு இடம் இல்லை - டத்தோ வீர மெகாட் சுள்கர்னையின் சவால்.
சிலாங்கூர் அரசியலில்  துரோகிகளுக்கு இடம் இல்லை - டத்தோ வீர மெகாட் சுள்கர்னையின் சவால்.

செய்தி , சு.சுப்பையா

பாங்கி.ஜூலை.7-  சிலாங்கூர் அரசியலிருந்து அஸ்மின் அலி என்ற துரோகியை அகற்ற வேண்டும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோம்பாக் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த போது சொன்னேன் நான் தோல்வியுற்றால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன். அதே போல் நீங்கள் ( அஸ்மின் ) தோல்வியுற்றாலும் ஒதுங்கி கொள்ளுங்கள் என்று. ஏன் இதனை சொன்னேன் என்றால் அஸ்மின் அரசியல் அரங்கில் ஒரு துரோகி. துரோகிகள் அரசியல் களத்தில் இருக்க கூடாது என்பதை உணர்த்தவே கூறினேன் என்று சிலாங்கூர் மாநில அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோ வீர மெகாட் சுள்கர்னையின் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அம்னோ வாக்குகளை பெரிக்காதானுக்கு கொண்டு செல்லும் துரோக செயலில் தான் ஸ்ரீ நோ ஒமார் ஈடுபட்டுள்ளார். இந்த துரோகச் செயலை முறியடித்து அம்னோவையும் நம்பிக்கை கூட்டணியையும் வெற்றி பெறச் செய்வேன் என்று சவால் விடுத்தார்.

சிலாங்கூர் மாநில அம்னோ அரசியலில் நோ ஒமார் தலைமைத்துவம் தோல்வி அடைந்த தலைமைத்துவம். அவரது காலத்தில் அம்னோ தோல்வியை தழுவியது. ஆனால் வரும் மாநிலத் தேர்தலில் அம்னோவும் நம்பிக்கை கூட்டணியின் எல்லா வேட்பாளர்களும் வெற்றியடைய சிலாங்கூர் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஒற்றுமை அரசாங்கம் மலர் வதை உறுதி செய்வேன் என்று சூளுரைத்தார்.

இந்த தேர்தலில் புறக்கணிப்பு என்று எதுவும் நடக்காது. தேர்தல் என்றால் கடுமையான போட்டி போடுவதே நமது வேலை என்பதை எனது நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேசிய முன்னணி முழு மூச்சாக பாடு படும். இதே போல் நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை கூட்டணியும் பாடு பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

12 ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தில் ஒற்றுமை அரசு மலர் வதை உறுதி செய்வோம் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.