வேட்பாளராக விருப்பமா? உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது கெஅடிலான்

6 ஜூலை 2023, 9:16 AM
வேட்பாளராக விருப்பமா? உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது கெஅடிலான்

ஷா ஆலம், ஜூலை 6- வரும் மாநிலத் தேர்லில் போட்டியிட விரும்பும்

கெஅடிலான் உறுப்பினர்கள் வரும் திங்கள்கிழமை தொடங்கி அதற்காக

விண்ணப்பம் செய்யலாம்.

ஆர்வமுள்ள உறுப்பினர்கள் www.calonkeadilan.org என்ற அகப்பக்கத்திற்குச்

சென்று இணையம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று

கெஅடிலான் கட்சித் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

எனினும், நிர்ணயிக்கப்பட் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே

அவர்கள் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று அவர்

சொன்னார்.

வேட்பாளராக விரும்புவோர் 18 வயதுக்கும் மேற்பட்ட மலேசியர்களாகவும்

திவாலாகாதவர்களாவும் குற்றப்பதிவுகளைக் கொண்டிராதவர்களாகவும்

இருக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க

வேண்டும் என்பதோடு விசுவாச பிரமாணப் பத்திரத்திலும் கையெழுத்திட

வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மேற்குறிப்பிட்ட அகப்பக்கத்தை சோதனையிட்ட போது அதில்,

வேட்பாளராக விண்ணப்பம் செய்வோர் உடல் ரீதியாகவும் மனோ

ரீதியாகவும் திடமானவர்களாகவும், போதைப் பொருள் பழக்கம்

இல்லாதவர்களாகவும் கட்சியிடம் பண பாக்கி வைத்திராதவர்களாகவும்

இருத்தல் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் விண்ணப்ப நிபந்தனைகள் அவ்வப்போது அதிகரித்துக்

கொண்டே போகும் எனவும் அந்த பாரத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.