NATIONAL

11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை பிரதமர் தொடக்கி வைக்கிறார்

6 ஜூலை 2023, 3:13 AM
11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை பிரதமர் தொடக்கி வைக்கிறார்

புத்ரா ஜெயா, ஜூலை 6-

ஓம்ஸ் அறவாரியம், மலாயாப் பல்கலைக்

கழக இந்திய ஆய்வியல்

துறையின் ஆதரவோடு உலகத் தமிழ்

ஆராய்ச்சி நிறுவனம் ஏற்று நடத்தும்

செம்மொழியான தமிழ் மொழியின்

11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

எதிர்வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23

ஆம் தேதி வரை மலாயா

பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில்

மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது

எதிர்வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5.00

மணிக்கு இந்த மாநாட்டை மலேசிய

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி

வைப்பார்.

இந்த மாநாட்டை பிரதமர் தொடக்கி

வைப்பது பெருமையளிப்பதாக உள்ளது

என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார்

தெரிவித்தார்.

புதிய வரலாறு எழுதப் போகும் இந்த

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்

உலகில் இருந்து தமிழ் அறிஞர்கள்

உட்பட 2,000 பேராளர்கள் மற்றும் 1,000

பார்வையாளர்கள் பேர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத்

தொடக்கி வைக்க பிரதமர் டத்தோஸ்ரீ

அன்வார் இப்ராஹிம் இணக்கம்

தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில் பிரதமர்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின்

பேருரை உலகப் பேராளர்களை

பெரிதும் கவரும் என்பதில்

சந்தேகமில்லை என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.