MEDIA STATEMENT

மக்கள் வாழ வளமான சூழல் அளிக்கும்    பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை  சிலாங்கூர்   மக்கள்  தொடர வேண்டும்

5 ஜூலை 2023, 5:12 PM
மக்கள் வாழ வளமான சூழல் அளிக்கும்    பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை  சிலாங்கூர்   மக்கள்  தொடர வேண்டும்

முன் வந்த செய்திகள் -சு. சுப்பையா

பெட்டாலிங் ஜெயா ஜூலை  5; இன்று  நாட்டின் மிக வளமான மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியான தாமான்  மேடானில்  பக்கத்தான் ஹராப்பான்  தனது மாநிலத் தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விட்டது. இதில்  பக்காத்தான்  ஹராப்பானின் பல  மாவட்ட மற்றும் மாநிலத் தலைவர்களுடன்  கெஅடிலான் தேசிய உதவித்தலைவரும்  பொருளாத்துறை அமைச்சருமான   ரஃபிஸி  ராம்லி மற்றும்  மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோரும்  கலந்து சிறப்பித்தனர்,

இங்கு  உரை நிகழ்த்திய அனைத்து தலைவர்களும்  நாடு இன்னும் சிறப்பாகப் பொருளாதாரத் துறையில் சாதனைகள் படைக்க நாட்டில்  அமைதி மற்றும் மக்களிடம் ஒற்றுமை அவசியம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.. இன்று நாட்டின் பொருளாதாரத்துக்கு அதிக பங்களிப்பை வழங்கும்  ஒரு மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது.

இந்தச் சிறப்பு மிக்க மாநிலத்தை ஆளும் அரசாகப் பக்காத்தான் விளங்குகிறது. இங்குள்ள மக்கள் நாட்டில் வேறு எங்கும் கிடைக்காத பல சலுகைகள்  அனுபவிக்கின்றனர்.  ஒரு குழந்தை பிறந்தது முதல்  முதுமையான இறுதி நாள்வரை  எல்லாப் பிரிவு மக்களின் வாழ்நாள் தேவைகளை  அறிந்து உதவும் ஒரு அரசாக பக்கத்தான் மாநில  அரசு விளங்கி வருகிறது. அதை மிகச் சிறப்பாக  இன்றைய மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வழி நடத்தி வருகிறார் என்று பாராட்டி  வாழ்த்தினர்.

இன்று நாட்டின் பொருளாதாரத்தில்,  மேம்பாட்டிலும், மக்கள் நலத்திட்டங்களிலும்  முன்னணி மாநிலமாக சிலாங்கூர் விளங்க அதன்  சிறந்த தலைமைத்துவம் , மக்கள் நல்வாழ்வில்  அது கொண்ட அக்கறையும் காரணங்களாக இருக்கின்றன. இங்குள்ள மக்கள்  பல மக்கள் நலத் திட்டங்களை  அனுபவிக்கவும், நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக வளரவும், அதிகக் கையிருப்பை கொண்ட மாநிலமாக சிலாங்கூர்  மாறி மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகிறது.

இன்று   இம்மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமின்றி,  இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்கள் வாழ்க்கை  மலரப் பல விதமாக  உதவி வருகிறது  சிலாங்கூர். அதனால் நாட்டின் அத்தனை மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அனைவருக்கும் வாழ்வளிக்கும் , செல்வம் கொழிக்கும், வெற்றிகரமான மாநிலமாக சிலாங்கூர் விளங்கி  வருவதற்கான  சான்றாகப் பெருகி வரும் ஜனத்தொகை காட்டும்.

இனிப்பு உள்ள இடத்திற்கு எறும்புகள்  வருவது போல், நல்ல  தொழில், நல்ல வாழ்க்கை, நல்ல சுகாதாரம் , நல்ல கல்வி, மன நிம்மதி, வாழ வளமான சூழலைப்  பக்கத்தான்  ஆட்சியில் சிலாங்கூர் வழங்கி வருகிறது.  அதனால் நல்லவை வாழ்வதும், வளர்வதும் நாட்டுக்கு நன்மை.

அதனால்  அத்தனை சாதனைகளுக்கும்  காரணமாக இருக்கும் பக்கத்தான் ஹராப்பான்  ஆட்சிக்கு  மக்கள் தொடர்ந்து  ஆதரவளித்து வெற்றியை நிலைநிறுத்த வேண்டும் என்று எல்லாப்  பேச்சாளர்களும் வந்திருந்த வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.