NATIONAL

கெமமான் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களின் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டது

4 ஜூலை 2023, 9:13 AM
கெமமான் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களின் மற்றொரு உடல் கண்டெடுக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூலை 4: ஆயர் பூத்தே, ஜெராம் மாவாரில் நேற்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களில் மற்றொரு உடல் இன்று காலை 7.45 மணியளவில் அப்பகுதியில் உள்ள டடோங் மசூதிக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்டது.

அந்த உடல் இளம் வயது பெண்  என்று அதிகாரிகளால்  அதிகாரப்பூர்வமாக    இன்னும் அடையாளம்  உறுதிப்படுத்தப்படவில்லை என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

இதுவரை ஏழு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மூவரை காணவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, 10 பேர் கொண்ட குடும்பம் ஜெராம் ஆயர் புத்தேவில் சுற்றுலா சென்றபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.