NATIONAL

15-வது மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து சிறப்புக் கூட்டம்

3 ஜூலை 2023, 7:03 AM
15-வது மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து சிறப்புக் கூட்டம்

ஷா ஆலம், ஜூலை 3: 15-வது மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் (SPR) இன்று புதன்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்துகிறது.

கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான 14வது மாநிலச் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது எனத் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இந்தேரா இக்மல்ருடின் இஷாக் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

"இந்தச் சிறப்புக் கூட்டத்திற்குத் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே தலைமை தாங்குகிறார். அவர் 15வது மாநிலத் தேர்தலின் முக்கியமான தேதிகளான தேர்தல் ரிட் தேதி, வேட்பாளர் நியமன நாள், வாக்களிக்கும் நாள், வாக்காளர் பதிவு மற்றும் பிறத் தயாரிப்புகள் குறித்து விவாதிப்பார்." என்றார்.

இதன்படி கூட்டம் முடிந்ததும் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.