NATIONAL

இரு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கைது

3 ஜூலை 2023, 4:42 AM
இரு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை கைது

கோலாலம்பூர், ஜூலை 3- தாமான் செராஸ்

இண்டாவில் உள்ள வீட்டில் தனது இரண்டு

பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியதோடு

மனைவியை மிரட்டியதாகக் கூறப்படும்

நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த 40 வயதுடைய சந்தேக நபர் தனது 11

வயது மகளின் முகத்தில் இரண்டு முறை

அடித்ததோடு மூன்று வயது சகோதரனின்

முகத்தில் அறைந்து காயங்களை

ஏற்படுத்தியுள்ளார்.

தனது மற்றும் குழந்தைகளின்

கடப்பிதழ்களைத் திருப்பித் தருமாறு அவரது

மனைவி கேட்டபோது அந்நபர்

ஆக்ரோஷமடைந்ததாக அம்பாங் ஜெயா

மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி

முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

அவ்விரு பிள்ளைகளும் சிகிச்சை மற்றும்

கண்காணிப்பிற்காக அம்பாங்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள

வேளையில் சந்தேக நபர் ஜூலை 7ஆம் தேதி

வரை ஏழு நாட்களுக்கு விசாரணைக்காகத்

தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அவர்

நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் போலீஸில் புகார்

செய்ய வேண்டாம் என அந்த 37 வயது

சந்தேக நபர் மனைவிக்கு அச்சுறுத்தல்

விடுத்துள்ளதாகவும் அவர்

சொன்னார்.

இழுவை வாகன ஓட்டுநரான சந்தேக நபர்,

கம்போங் அம்பாங் இண்டாவில் கடந்த ஜூன்

30ஆம் தேதி கைது செய்யப்பட்டதாகவும்

அவரிடம் முந்தைய குற்றவியல் அல்லது

போதைப்பொருள் பதிவுகள் எதுவும் இல்லை

என்பது சோதனையில்

கண்டறியப்பட்டுள்ளதாகவும் முகமது ஆசாம்

கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.