EKSKLUSIF

சிலாங்கூரின்  ''அருஸ்மேராகுனிங்'' என்ற முழக்கத்தைத் தாங்கிய ஹரப்பான் தேர்தல்  இயந்திரம் முடுக்கிவிடப்பட்டது.

24 ஜூன் 2023, 6:30 PM
சிலாங்கூரின்   ''அருஸ்மேராகுனிங்'' என்ற முழக்கத்தைத் தாங்கிய  ஹரப்பான் தேர்தல்  இயந்திரம்  முடுக்கிவிடப்பட்டது.
சிலாங்கூரின்   ''அருஸ்மேராகுனிங்'' என்ற முழக்கத்தைத் தாங்கிய  ஹரப்பான் தேர்தல்  இயந்திரம்  முடுக்கிவிடப்பட்டது.
சிலாங்கூரின்   ''அருஸ்மேராகுனிங்'' என்ற முழக்கத்தைத் தாங்கிய  ஹரப்பான் தேர்தல்  இயந்திரம்  முடுக்கிவிடப்பட்டது.
சிலாங்கூரின்   ''அருஸ்மேராகுனிங்'' என்ற முழக்கத்தைத் தாங்கிய  ஹரப்பான் தேர்தல்  இயந்திரம்  முடுக்கிவிடப்பட்டது.

செய்தி  சு.சுப்பையா

ஷா ஆலம், ஜூன் 24:  வெள்ளிக்கிழமை ஜூன் 23 அன்று, சிலாங்கூர் மாநில சட்டமன்றம் அதிகாரப் பூர்வமாக கலைக்கப்பட்டதை அடுத்துச் சிலாங்கூர் ஹரப்பான் தேர்தல்  இயந்திரம் ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில்  இன்று முடுக்கிவிடப்பட்டது.

சிலாங்கூர் சிவப்பு மஞ்சள் எழுச்சி பேரணி  ''அருஸ்மேராகுனிங்'' என்ற முழக்கத்தைத் தாங்கி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சிலாங்கூர் ஹரப்பான் தேர்தல் இயந்திரம் தொடங்கப்பட்டது.

அதன் ஆரம்ப  நிகழ்வில் திரண்ட  சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில் மாநில HOPE தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியால் முடுக்கிவிடப்பட்டது.

இந்த நிகழ்வில், அமிருடின் தனது நிர்வாகத்தின் 5 ஆண்டுகள் நிறைவு அடையாளமாக ஐந்து நான்கு சக்கர வண்டிகளைக் கொண்ட(4WD) வாகன அணி (கான்வாய்) ஒன்றையும்  முடுக்கி விட்டார்.

அதைத் தொடர்ந்து அனைத்து மாநில சட்டமன்றத்தையும் (DUN) பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரப்பான் கொடியை ஏந்திய 56 மோட்டார் சைக்கிள்களின் இயக்கம் நடைபெற்றது.

இதுவரை  மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வெற்றிகளை மக்களுக்கு ஒளி காட்சிகளுடன் காண்பிக்க மாநிலத்தின் அனைத்து மூலைகளுக்கும் பயணிக்கும் திரையுடன் கூடிய மூன்று டன் டிரக்  வாகன  வெளியீடு  நிகழ்வின்  உச்சத்தை எட்டியது. இந்த  *சிலாங்கூர் தேர்தல் இயந்திரம் * PRN * பிரச்சாரம் முழுவதும் *சிவப்பு மஞ்சள் எழுச்சி பேரணி *#arusmerahkuning* என்ற முழக்கத்தை ஏந்திச் செல்லும்.

இந்நிகழ்வில், அமானா தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு, சிலாங்கூர் அமானா தலைவர் இஸ்ஹாம் ஹாஷிம் மற்றும் டிஏபி துணைத் தலைவர் இங் சூய் லிம், முன்னாள்  செந்தோசா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் , உட்பட ஆட்சி குழுவினர்களுடன்,  கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மாநில  அரசாங்கத்தின் சாதனைகளைத் தலைவர்கள் பட்டியலிட்ட பொழுது அனைத்து தொகுதிகளில் இருந்து  வந்த ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்  உற்சாகத்துடன்  ஆர்ப்பரித்து வரவேற்றனர்

14வது பொதுத் தேர்தலில் (GE14), ஹரப்பான் சிலாங்கூரில் 56 இடங்களில் 51 இடங்களில் வெற்றி பெற்றது, அதைத் தொடர்ந்து பாரிசான் நேசனல் (BN) மற்றும் PAS முறையே நான்கு மற்றும் ஒரு இடங்களைப் பெற்றது.

மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன் சமீபத்திய இருக்கை நிலை என்னவென்றால், ஹரப்பான் 40 இடங்களைக் கொண்டிருந்தது (கெ அடிலான்-19, ஜசெக-15, அமானா-ஆறு), பிஎன் (ஐந்து), பெர்சத்து (நான்கு), பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) (இரண்டு) PAS, Pejuang மற்றும் Warisan தலா ஒரு இடம் மற்றும் ஒரு சுயேச்சை பிரதிநிதி.

மற்றொரு இடமான பத்தாங் காலி மாநிலச் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர் ஆறு மாதங்களுக்கும் மேலாக மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்காததால் அவ்விடம் காலியாகி விட்டதாக அறிவிக்கப் பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.