NATIONAL

சட்டமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை சிலாங்கூர் தேர்தல் ஆணையத்திடம்   சிலாங்கூர் மாநில சபாநாயகர்  ஒப்படைத்தார்

23 ஜூன் 2023, 7:20 AM
சட்டமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை சிலாங்கூர் தேர்தல் ஆணையத்திடம்    சிலாங்கூர் மாநில சபாநாயகர்  ஒப்படைத்தார்

ஷா ஆலம், ஜூன் 23: இன்று காலை சிலாங்கூர் மாநில சட்டப் பேரவையின்  சபாநாயகர் இங் சுய் லிம், இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில் சிலாங்கூர் தேர்தல் ஆணையத்தின் (SPR) இயக்குநர் ஷாஃபி தாயிப்பிடம், மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பை ஒப்படைத்தார்

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கடந்த திங்கட்கிழமை மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதற்காகக் கையெழுத்திட்டதன் வழி மாநில தேர்தல் (PRN) நடைபெற வழி வகுத்தது.

மாநிலத் தேர்தலை நடத்தும் ஆறு மாநிலங்களில் சிலாங்கூரும் ஒன்றாகும். பிற மாநிலங்கள் நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகும்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.