NATIONAL

தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுக்க ஹராப்பான் அரசின் சிறப்பான பொருளாதார அடைவு நிலை உதவும்

23 ஜூன் 2023, 3:23 AM
தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுக்க ஹராப்பான் அரசின் சிறப்பான பொருளாதார அடைவு நிலை உதவும்

ஷா ஆலம், ஜூன் 23- பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் ஆண்டு தோறும்

அதிகரித்து வரும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து நிலை

நிறுத்துவதற்கு ஏதுவாக எதிர்வரும் மாநிலத் தேர்தலில் மக்கள் இந்த

ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என

வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிலாங்கூர் வளர்ச்சியடைந்த மாநிலமாகவும் நாட்டின் மொத்த உள்நாட்டு

உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாகவும் விளங்குவதால்

மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைக்கக்கூடாது என்று இளம்

தலைமுறையின் மேம்பாடு, விளையாட்டு மற்றும் மனுக்குல மேம்பாட்டுத்

துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான்

கூறினார்.

ஹராப்பான் அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் மக்கள்

இத்தேர்தலில் சரியான முடிவினை எடுப்பார்கள் எனத் தாம் நம்புவதாக

அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி

வழங்கும் நிகழ்வுக்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம்

அவர் இதனைத் தெரிவித்தார்.

ஹராப்பான் தலைமையிலான நிர்வாகத்தின் வாயிலாக மாநிலத்தின்

கூடுதல் வருமானம் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் வாயிலாக மீண்டும்

மக்களுக்கே வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

இம்மாதம் 9ஆம் தேதி கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.