NATIONAL

மாநிலத் தேர்தலை (பிஆர்என்) முன்னிட்டு நான்கு பொது இடங்கள் மூடப்படுகின்றன - சுபாங் ஜெயா நகராண்மை கழகம்

22 ஜூன் 2023, 10:30 AM
மாநிலத் தேர்தலை (பிஆர்என்) முன்னிட்டு நான்கு பொது இடங்கள் மூடப்படுகின்றன - சுபாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 22: சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஜே) மாநிலத் தேர்தலை (பிஆர்என்) முன்னிட்டு நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை இரண்டு மாதங்களுக்கு அதன் நிர்வாகப் பகுதியில் உள்ள நான்கு பொது இடங்களை மூடுகிறது.

மூன்று பொது மண்டபங்கள் மற்றும் ஒரு அரங்கத்தை எம்பிஎஸ்ஜே மூட உள்ளது, காரணம் இவ்விடங்கள் நடமாடும் அறை மற்றும் வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்தப்படும்.

"இவ்விடங்கள் செர்டாங் ஜெயா அரங்கம், பூச்சோங் இண்டா பொது மண்டபம். கின்றாரா பிகே 5 பொது மண்டபம் மற்றும் சுபாங் ஜெயா 3கே காம்ப்ளக்ஸ் பொது மண்டபம் ஆகியவை ஆகும்.

"இந்த நடவடிக்கை நான்கு தொகுதிகளை உள்ளடக்கியது, அவை ஶ்ரீ கெம்பாங்கன், ஶ்ரீ செர்டாங், கின்றாரா மற்றும் சுபாங் ஜெயா ஆகும்," என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

இந்த இடங்கள் அனைத்தும் செப்டம்பர் 1 ஆம் தேதி மீண்டும் செயல்பட தொடங்கும்.  மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் சுபாங் ஜெயா அழைப்பு மையத்தை 03-8024 7700 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது சுபாங் ஜெயா மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தைப் பார்வையிடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.