NATIONAL

வெ.100 கோடி மதிப்புள்ள சுய கடன் விண்ணப்பங்களுக்கு இ.பி.எஃப். அனுமதி

22 ஜூன் 2023, 9:25 AM
வெ.100 கோடி மதிப்புள்ள சுய கடன் விண்ணப்பங்களுக்கு இ.பி.எஃப். அனுமதி

கோலாலம்பூர், ஜூன் 22-இவ்வாண்டு ஜூன் 11ஆம் தேதி வரையிலான

காலக்கட்டத்தில் ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) இரண்டாவது

கணக்கிலிலுள்ள பணத்தை அடமானமாக வைத்து கடன் பெறுவது

தொடர்ப்பில் 98 கோடியே 19 லட்சம் வெள்ளி மதிப்புள்ள

விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியது.

அந்த தொகையில் 87 கோடியே 86 லட்சம் வெள்ளி மலேசியா பில்டிங்

சொசைட்டி பெர்ஹாட் (எம்.பி.எ.பி.) வாயிலாகவும் 10 கோடியே 33 லட்சம்

வெள்ளி பேங்க் சிம்பானான் மூலமாகவும் மீட்கப்பட்டதாக அது

தெரிவித்தது.

எஃப்.எஸ்.ஏ.2 எனப்படும் இந்த கடனுதவித் திட்டத்திற்கு 168,925

பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்த வேளையில் 88,414 பேரின்

விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அவர்களில் 47,696 பேர் இந்த

கடனுதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்தனர் என்று மேலவையில்

இன்று வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு கூறியது.

ஊழியர் சேம நிதிப் பணத்தை அடமானமாக வைத்து கடன் பெறும்

திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த இ.பி.எஃப். சந்தாதாரர்களின் எண்ணிக்கை

குறித்து செனட்டர் டாக்டர் வான் மார்த்தினா வான் யூசுப்

கேள்வியெழுப்பியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.