NATIONAL

நேற்று பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது

21 ஜூன் 2023, 9:28 AM
நேற்று பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 21: காஜாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாகன நிறுத்தும் இடத்திற்கு முன் இருந்த சாலையோரத்தில் நேற்று பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

செர்டாங் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை உயிரிழந்ததாகக் காஜாங் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமது ஜைத் ஹாசன் தெரிவித்தார்.

காலை 7.07 மணி அளவில் 51 வயதுடைய ஒருவரால் அக்குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக அவரது தரப்புக்குப் புகார் கிடைத்துள்ளது.

செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அக்குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

"காலை 10.35 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி அக்குழந்தை இறந்து விட்டதை மருத்துவமனை உறுதிப்படுத்திய, பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது" என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் 318 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது  என்றார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முஹம்மது தஸ்னிம் முகமட்டையோ 014-6209 960 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவலாம் என்றார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.