NATIONAL

காற்றில் பறந்த பள்ளியின் கூரை வீட்டில் விழுந்தது- மகாதேவி பரிதாப மரணம்

20 ஜூன் 2023, 7:07 AM
காற்றில் பறந்த பள்ளியின் கூரை வீட்டில் விழுந்தது- மகாதேவி பரிதாப மரணம்

ஜொகூர் பாரு, ஜூன் 20- இங்குள்ள செக் வா தேசிய

இடைநிலைப்பள்ளியின் கூரை காற்றில் பறந்து வீட்டின் மீது விழுந்ததில்

பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் வி.மகாதேவி (வயது 55) என்ற அந்த

பெண்மணி சம்பவ இடத்திலேய மரணமடைந்ததைச் சுகாதார அமைச்சு

உறுதிப்படுத்தியதாகச் சிகாமாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்

உதவி ஆணையர் முகமது ஹஷிம் அப்துல் ரசாக் கூறினார்.

நேற்றிரவு 7.41 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து

ஐவர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக

அவர் சொன்னார்.

சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பள்ளியின் 5,400 சதுர அடி பரப்பளவிலான

கூரை காற்றில் பெயர்ந்து அவ்வீட்டின் மீது விழுந்துள்ளதை தாங்கள்

கண்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வீட்டிலிருந்து பெண்மணி ஒருவர் பொது மக்களால்

இடிபாடுகளிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டார். அவர் மரணமுற்றது

உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் அடுத்தக் கட்ட

நடவடிக்கைகாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் அறிக்கை

ஒன்றில் கூறினார்.

இந்த மீட்பு நடவடிக்கை இரவு 8.21 மணியளவில் முற்றுப் பெற்றதாகவும்

அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.