NATIONAL

நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன இளைஞன் சடலமாக  மீட்பு

16 ஜூன் 2023, 9:45 AM
நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன இளைஞன் சடலமாக  மீட்பு

குவாந்தான், ஜூன் 16: நேற்று பெந்தோங்கில் உள்ள சாமாங் நீர்வீழ்ச்சியில் குளித்துக்

கொண்டிருந்த போது காணாமல் போன இளைஞன் நீரில் மூழ்கி இறந்து

கிடக்க கண்டு எடுக்கப் பட்டார்.

19 வயதான முஹமட் அக்மல் ஹுஸ்னி முகமட் ரிட்சுவான் (19) என்பவரின் உடல், நீர்

மீட்புக் குழுவின் (PPDA) உறுப்பினர்களால் காலை 9.52 மணி அளவில்

கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் சம்ப இடத்திலிருந்து ஐந்து மீட்டர் தொலைவில்

கண்டெடுக்கப்பட்டுள்ளது என பஹாங் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத்

துறையின் (JBPM) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இறந்தவரின் சடலம் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம்

ஒப்படைக்கப்பட்டது,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

புதன்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவர், 14

மாணவர்களுடன் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பாடு செய்திருந்த முகாம் நடவடிக்கையில்

பங்கேற்றதாக ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.