புத்ரா ஜெயா, ஜூன் 15- பதினைந்தாவது மாநிலத் தேர்தலில்
பார்வையாளர்களாகப் பணியாற்றுவதற்கு இன்று தொடங்கி வரும் ஜூலை
மாதம் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம்
கூறியது.
பதினைந்தாவது மாநிலத் தேர்தல் சிலாங்கூர், பினாங்கு, நெகிரி
செம்பிலான், திரங்கானு, கெடா, கிளந்தான் ஆகிய ஆறு மாநிலங்களை
உள்ளடக்கியுள்ளது.
அமைப்புகளைப் பிரதிநிதித்து பார்வையாளர்களாகப் பணியாற்றுவது
தொடர்பான விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட் நிபந்தனைகள் மற்றும்
விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று தேர்தல்
ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மாருள்டின் இஷாக் கூறினார்.
வேட்புமனுத் தாக்கல், பிரசாரம், ஆரம்ப வாக்களிப்பு, வாக்களிப்பு,
வாக்குகளை எண்ணுவது மற்றும் மொத்தமாக கணக்கிடுவது ஆகிய
பணிகளை கண்காணிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று
அவர் சொன்னார்.
ஆர்வமுள்ளோர் https://www.spr.gov.my/ என்ற அகப்பக்கம் வாயிலாக இதன்
தொடர்பான விபரங்களைப் பெறலாம் என்தோடு விண்ணப்பபாரங்களையும்
பதிவிறக்கம் செய்யலாம் என அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர்,
பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, திரங்கானு மற்றும் கிளந்தான்
ஆகிய ஆறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறவில்லை.
ஜூன் மாதத்தின் இறுதி இரு வாரங்களில் சட்டமன்றங்களைக் கலைக்க
அந்த ஆறு மாநில அரசுகளும் இணக்கம் கண்டுள்ளதாக ஊடகங்கள்
இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.








