SELANGOR

பண்டார் கின்றாராவில் கூடைப்பந்து மைதானத்தை மேம்படுத்த 500,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

13 ஜூன் 2023, 9:43 AM
பண்டார் கின்றாராவில் கூடைப்பந்து மைதானத்தை மேம்படுத்த 500,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

சுபாங் ஜெயா, ஜூன் 13: இங்குள்ள ஜாலான் பிகே 3/2 பண்டார் கின்றாரா பொழுதுபோக்கு பூங்காவில் கூடைப்பந்து மைதானத்தை மேம்படுத்த 500,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுபாங் ஜெயா நகராண்மை கழகம் (MBSJ) டெண்டர் கோரும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கட்டுமானம் இந்த ஆகஸ்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பண்டார் கின்றாரா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) இங் ஸீ ஹான் கூறினார்.

“இந்த கட்டுமானப் பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூடைப்பந்து மைதானம் கூரையுடன் கட்டப்படும். எனவே, மழை காலங்களில் கூட விளையாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.

" இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு வழக்கமாக வார இறுதி நாட்களில் 500 பேரும் வார நாட்களில் 100 பேரும் வந்து செல்வார்கள்," என்று அவர் இன்று அப்பகுதியை ஆய்வு செய்த பின்னர் கூறினார்.

குடியிருப்பாளர்களுக்காக வசதிகளை மேம்படுத்த தனது தரப்பு எப்போதும் முயற்சித்து வருகிறது என்றார்.

கூடுதலாக, அந்த பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் விளையாட்டு மைதானம், ஃபுட்சல் மைதானம் மற்றும் கால்பந்து மைதானம் ஆகியவையும் உள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.