NATIONAL

மலேசியக் கடல் பகுதியில் நுழைந்த இரு இந்தோ. மீன்பிடி படகுகள் தடுத்து வைப்பு

13 ஜூன் 2023, 9:33 AM
மலேசியக் கடல் பகுதியில் நுழைந்த இரு இந்தோ. மீன்பிடி படகுகள் தடுத்து வைப்பு

ஜோர்ஜ் டவுன், ஜூன் 13- மலேசியக் கடல் பகுதியில் எட்டு

பணியாளர்களுடன் நுழைந்த இந்தோனேசியாவின் இரு மீன்பிடி

படகுகளை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தடுத்து

வைத்துள்ளது.

நேற்று காலை 10.13 மணியளவில் புலாவ் கெண்டியின் தென்மேற்கே 28

மற்றும் 30வது கடல் மைல் பகுதியில் அவ்விரு படகுகளும் தடுத்து

வைக்கப்பட்டதாகக் கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் கேப்டன்

அப்துல் ரசாக் முகமது கூறினார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த படகின் கேப்டன் உள்பட நால்வர் பயணித்த

முதலாவது படகில் 400 கிலோ எடையுள்ள மீன் உள்ளிட்ட பல்வேறு கடல்

உணவுகள் இருந்ததாக அவர் சொன்னார்.

கேப்டன் உள்பட நால்வருடன் பயணித்த இரண்டாவது படகில் 100 கிலோ

கடல் உணவுகள் இருந்தன. 13 முதல் 20 வயது வரையிலான அனைவரும்

செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை என்று அவர்

அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் 1985ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தின் 15(1)(ஏ)

பிரிவு மற்றும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவின்

கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.