கோலசிலாங்கூர் சுங்கை திராப் ஜூன் 12- சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சி குழு உறுப்பினரும்,கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான Y.b.மாண்புமிகு கணபதிராவ் வீரமான் அவர்களால் நேற்று கோலசிலாங்கூர் சுங்கை திராப் தமிழ்ப்பள்ளியின் மண்டபம் திறப்பு விழா கண்டது.
'சிந்தனையை சிற்பமாக்குவோம் சிற்பத்தை சிகரமாக்குவோம்' என்ற தாரக மந்திரத்தை மையமாக கொண்டுள்ள கோலசிலாங்கூர் சுங்கை திராப் தமிழ்ப்பள்ளி மண்டப திறப்பு வழாவுக்கு பெற்றோர்களும் வாரிய உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொருப்பாளர்களும்,கோலசிலாங்கூர் மாவட்டம் நகராண்மைக்கழத்தினர்கள் இந்திய கிராமத்து தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பள்ளியின் இன்றைய நிகழ்வின் முதல் அங்கமாக பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி: கண்ணியம்மா பொன்னுசாமி பேசுகையில் இப்பள்ளியில் முதல் முறையாக மாணவர்களுக்கும்,பள்ளி சம்பந்தப்பட்ட நிகழ்விற்கு சிறப்பான ஒரு மண்டபம் அமைப்பட்டிருப்பதற்கு மூலக்காரணமாக திகழ்வது இங்கு சிறப்பு வருகை அளித்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், நமது வாரிய உறுப்பினர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பல நல்ல உள்ளங்களின் உழைப்பும், உதவியும் என்றார்.
அதற்கு, முதலில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். .அதே சமயம் இப்பள்ளி மாணவர்கள் மேம்பாட்டுக்கு தற்போது நல்ல பல திட்டங்களை வகுத்து வருகிறது. அவைகளை சிறப்பாக நிறைவேற்ற தொடர்ந்து எங்களுக்கு உங்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதனை அடுத்து சிறப்பு வருகையாளரான மாண்புமிகு கணபதிராவ் வீரமான் தமது உரையில் முதலில் இங்கு வருகை புரிந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.ஒரு பள்ளி சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு அப்பள்ளியின் தலைமைத்துவம் தான் காரணம். தலைமைத்துவ ஆற்றலுக்கு இந்த சுங்கை திராப் பள்ளி ஓர் எடுத்து காட்டு என்று சொல்லலாம்.அதற்கு முக்கியமானவராக விளங்குகிறார் அண்ணன் திரு :நாராயணசாமி பொன்னையா ஆவார்.
காரணம் என்னை இந்த மண்டப திறப்பு விழாவிற்கு வர வேண்டி பல தடவை என்னை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரை இந்த நேரத்தில் மறக்க முடியாது என்றார். மேலும் பேசுகையில் ஆரம்பகாலக் கட்டத்தில் பல தமிழ் பள்ளிக்கு என்னால் இயன்ற நிலம் மானியம், பேருந்து கட்டணம் பெற்று தந்துள்ளோம்.
தீபாவளி,பொங்கல் செலவிற்கான நிகழ்சிகளை நிறுத்தி விட்டு அதற்கான மானியத்தை மிச்சப்படுத்தி சிலாங்கூரில் கல்விக்கு கூடுதலாக அம்மானியத்தை கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி உயர்கல்வி மாணவர்களுக்கான நிதியையும் அதிகரிக்க செய்தோம் என்றார்.
இப்பள்ளியில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவதுடன், பள்ளி நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் அனைவருக்கும் தன் வாழ்த்துகளையும் கூறி தமது உரையை முடித்துக் கொண்டார் சிலாங்கூர் ஆட்சி குழு உறுப்பினரான வீ, கணபதிராவ்
அவரை அடுத்து நிறைவாக இடையிடையே சிறப்பாக அறிவிப்பாளர் பணி செய்த குமாரி: தேன்மொழி எல்லப்பன் நிறைவாக இந்த சுங்கை திராப் தமிழ் பள்ளியின் மண்டபம் திறப்பு விழாவிற்கு சிரமம் பாராமல் வருகை அளித்த அனைவருக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்ள நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.








