NATIONAL

சிறு வணிகர்களுக்கான எழுச்சி பட்டறையை பெண்கள் மகத்துவம் போற்றும் அமைப்பின் ஏற்பாட்டில் - கோம்பாக் நாடாளுமன்றம்

12 ஜூன் 2023, 8:50 AM
சிறு வணிகர்களுக்கான எழுச்சி பட்டறையை பெண்கள் மகத்துவம் போற்றும் அமைப்பின் ஏற்பாட்டில்  -  கோம்பாக் நாடாளுமன்றம்

கோலாலம்பூர், ஜூன் 12: நேற்று கோம்பாக் நாடாளுமன்றத்தில் பெண்கள் மகத்துவம் ‘’ வொண்டர்ஃபுல் ஆஃப் வுமன்’’ (WOW) ஏற்பாடு செய்திருந்த சிறு வணிகர்களுக்கான எழுச்சி பட்டறையில் மொத்தம் 30 சிறு தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) முதல் முறையாக இந்த இலவச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் உள்ள வட்டார அலுவலக மேலாளர் கூறினார்.

"இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண் தொழில் முனைவோர், குறிப்பாக B 40 குழுவைச் சேர்ந்தவர்கள் வணிகத்தில் தொடர்ந்து முன்னேற உதவுவதாகும்.

"எனவே, அந்தந்த வணிகங்களை மேம்படுத்த சமூக ஊடகங்களை நிர்வகிக்க இந்த திட்டம் அவர்களுக்கு உதவக்கூடும்" என்று நூர்ரிசல் அஹ்மத் இம்ரான் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதற்கிடையில், அனைத்து பங்கேற்பாளர்களும் இரண்டு மாதங்களில் நான்கு பட்டறைகள் மூலம் வழிநடத்தப் படுவார்கள் என்று Hub இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர், சுன் வா ஓ தெரிவித்தார்.

பங்கேற்பாளர்களுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங், சமூக ஊடக மேலாண்மை மற்றும் விற்பனையை அதிகரிக்க பல திறன்கள் கற்பிக்கப்படும்.

“கோவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பல சிறு வணிகர்களைப் பார்த்த பிறகு இந்தத் திட்டத்தை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

"கோம்பாக் தவிர, ஈப்போ, பேராக்கிலும் இதே போன்ற திட்டத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம், காரணம் இங்குள்ள சிறு வியாபாரிகளுக்கு உதவ வேண்டிய தேவை இருப்பதை நாங்கள் காண்கிறோம்," என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.