NATIONAL

காணாமல் போன சிறுவனின் சடலம் பெர்ணம் ஆற்றில் மீட்பு

7 ஜூன் 2023, 3:39 AM
காணாமல் போன சிறுவனின் சடலம் பெர்ணம் ஆற்றில் மீட்பு

தஞ்சோங் மாலிம், ஜூன் 7: கடந்த சனிக்கிழமை தெரதாக் ரிவர் வியூ லுபுக் ஹன்து, சிம்பாங் எம்பாட் அருகே உள்ள  பெர்ணம் ஆற்றில் காணாமல் போனதாகக் கூறப்படும் எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.

தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) பணியில் ஈடுப்பட்டிருந்த கண்காணிப்பு நாய் மூலம் அச்சிறுவனின் உடல் மதியம் 12.35 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக முஹல்லிம் மாவட்டக் காவல்துறை தலைவர் முகமது ஹஸ்னி முகமட் நசீர் தெரிவித்தார்.

"சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 7.3 கிலோமீட்டர் தொலைவில் நாங்கள் அச்சிறுவனின் உடலைக் கண்டோம்," என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

உறவினர்களால் அடையாளம் காண உடல் சிலிம் ரிவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.