NATIONAL

ஐந்து மாநிலங்களில் புதிய தீயணைப்புத் துறை இயக்குநர்கள் நியமனம்

2 ஜூன் 2023, 4:58 AM
ஐந்து மாநிலங்களில் புதிய தீயணைப்புத் துறை இயக்குநர்கள் நியமனம்

ஈப்போ, ஜூன் 2- சிலாங்கூர் உள்பட ஐந்து மாநிலங்களில் தீயணைப்பு

மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர்கள் மறு சீரமைப்பு தொடர்பான

அறிவிப்பை மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை

வெளியிட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் சிலாங்கூர், பேராக், கெடா,

ஜொகூர், புத்ரா ஜெயா ஆகிய ஐந்து மாநிலத் தீயணைப்புத் துறைகளுக்குப்

புதிய இயக்குநர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அத்துறையின்

துணைத் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது கூறினார்.

தீயணைப்புத் துறை இயக்குநர்களின் பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வு

காரணமாக இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று

அவர் குறிப்பிட்டார்.

கட்டாய பணி ஓய்வு பெறும் பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத்

துறை இயக்குநருக்குப் பதிலாக கெடா மாநிலத் தீயணைப்புத் துறை

இயக்குநர் நியமனம் செய்யப்படும் வேளையில் கெடா மாநிலத்திற்குப் புதிய

இயக்குநர் நியமிக்கப்படுவார்.

சிலாங்கூர், ஜொகூர் மற்றும் புத்ராஜெயாவுக்குப் புதிய இயக்குநர்கள்

நிமியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை பதவியை ஏற்றுக்

கொள்வார்கள் என இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்

அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.