NATIONAL

ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (RMAF) உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

1 ஜூன் 2023, 9:33 AM
ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (RMAF) உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

கோலாலம்பூர், ஜூன் 1: ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் (RMAF) உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 65 வது ஆண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த பணிபுரியும் அனைத்து ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ்  உறுப்பினர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாக பிரதமர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்

"உங்கள் சேவைகள் மற்றும் அர்பணிப்பு அனைத்து மக்களாலும் நிச்சயமாகப் பாராட்டப்படுகிறது" என்று பிரதமர் கூறினார்.

மலேசிய ஆயுதப் படையில் உள்ள விமானப்படை 2 ஜூன் 1958 இல் நிறுவப்பட்டது மற்றும் அந்த நேரத்தில் ராயல் ஃபெடரல் ஏர் ஃபோர்ஸ் (TUDP) என்று அறியப்பட்டது.

ஜூன் 1 அன்று ராயல் மலேசியன் ஏர் ஃபோர்ஸ் உருவாக்கப்பட்ட தினமாகக் கொண்டாடப்படுகிறது. இம்முறை 'வான் சக்தி, தேசிய அமைதியின் கேடயம்' என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.