NATIONAL

பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் மே 27 வரை 1,981 டிங்கி சம்பவங்கள் பதிவு

31 மே 2023, 3:59 AM
பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் மே 27 வரை 1,981 டிங்கி சம்பவங்கள் பதிவு

பெட்டாலிங் ஜெயா, மே 31- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் (எம்.பி.பி.ஜே.) கடந்த மே 21 முதல் 27 வரையிலான ஒரு வாரத்தில் மொத்தம் 121 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் பெட்டாலிங் ஜெயா பகுதியில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,981 ஆக அதிகரித்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் அஷான் முகமது அமீர் கூறினார்.

மே 14 முதல் மே 20 வரையிலான முந்தைய வாரத்தில் 99 டிங்கி சம்பவங்கள் பதிவான வேளையில் கடந்த வாரம் 22 சம்பவங்கள்  கூடுதலாகப் பதிவாகியுள்ளன என்று அவர் சொன்னார்.  எம்.பி.பி.ஜே. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மாநகர் மன்றக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

நோய்ப் பரவல் இடங்களின் எண்ணிக்கையும் 42 இல் இருந்து 49 ஆக கடந்த வாரம் உயர்வு கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.