NATIONAL

கோல லங்காட் செலாததான் வனப் பகுதியில் ஏற்பட்டத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது

31 மே 2023, 3:13 AM
கோல லங்காட் செலாததான் வனப் பகுதியில் ஏற்பட்டத் தீ முழுமையாக அணைக்கப்பட்டது

ஷா ஆலம், மே 31- கோல லங்காட் செலாத்தான் வனப் பகுதியின் 1.6 ஹெக்டர்

பரப்பளவில் கடந்த திங்கள் கிழமை ஏற்பட்ட தீ நேற்று மதியம் வெற்றிகரமாக

அணைக்கப்பட்டது.

மாலை 6.32 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தனது துறைக்கு அழைப்பு

வந்ததாகவும் 25 உறுப்பினர்களுடன் தீயை அணைக்கும் பணியை தாங்கள்

மேற்கொண்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஹபிஷாம் முகமது நூர் கூறினார்.

தீயை அணைக்கும் பணியில் கோல லங்காட் நில மற்றும் மாவட்ட அலுவலகம், சிலாங்கூர்

மாநில வனத்துறை, மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காவல்துறை

உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 33 உறுப்பினர்களும் உதவியதாக அவர்

சொன்னார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு மண்வாரி

இயந்திரங்கள் மூலம் அப்பகுதியைச் சீர் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது

என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.