MEDIA STATEMENT

எப்ஏ கப் சிலாங்கூர் அரையிறுதிக்குள் நுழைந்தது  நெகிரி செம்பிலான் 1 சிலாங்கூர்  3 .

28 மே 2023, 5:02 AM
எப்ஏ கப் சிலாங்கூர் அரையிறுதிக்குள் நுழைந்தது  நெகிரி செம்பிலான் 1 சிலாங்கூர்  3 .

சிரம்பான், 28 மே: எஃப்ஏ கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் எஃப்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டம் தொடங்கிய 43 வது வினாடிகளில் நெகிரி செம்பிலான்  இறக்குமதி  ஆட்டக்காரர் முஹம்மது சஃபுவான் பஹாருதின் ஒரு துல்லியமான ஹெடர் மூலம் நெகிரி செம்பிலானின் முதல் கோலை போட்டு,  அதனை முன்னணிக்கு  கொண்டு வந்தார்..

அதை சிறிது நேரத்தில் சமநிலை படுத்தியது சிலாங்கூர்,  ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில்  அணித் தலைவர் முஹம்மது முகைரி அஜ்மல் மஹதியின் வலுவான ஷாட் மூலம்  சிவப்பு ஜாம்பவான் ஆட்டத்தை சமம் செய்தது.,  இரு அணிகளும் மிகவும் சுறுசுறுப்பான  விளையாட்டை வெளிப்படுத்தினர்.

இறக்குமதி செய்யப்பட்ட நட்சத்திர ஆட்டக்காரர்கள் பற்றாக்குறையை நெகிரி செம்பிலான்  அணி எதிர் நோக்கினாலும், கே.தேவனின் வழிகாட்டுதலில் களமிறங்கிய நெகிரி  அணி   அது பல ஆபத்தான தாக்குதல்களை  தொடுக்க தவறவில்லை   அது  வெளிப்படுத்திய அபார ஆட்டத்திற்கு அவ்வணியை பாராட்ட வேண்டும்.

இரண்டாவது பாதியில் தொடர்ந்து, ஐந்து முறை FA கோப்பை சாம்பியனான சிலாங்கூர், 60 வது நிமிடத்தில் முகமது பைசலின் நேர்த்தியான பாஸைப் பெற்று பிரேசிலிய வீரர் யோஹான்ட்ரி ஜோஸ் ஓரோஸ்கோ வின் வலுவான வலது கால் ஷாட்டில் இருந்து இரண்டாவது கோலைப் புகுத்தினார்.

அது நெகிரிக்கு  அழுத்தத்தை அதிகரித்தது. இருப்பினும் முகமட் பைசல் 70வது நிமிடத்தில் இஸ்ஹான் நஸ்ரேல் சீக் அஸ்மானுடன் ஒருவரையொருவர் சந்திக்கும் சூழ்நிலையில் சிலாங்கூர் அணிக்கு ஒரு  அருமையான வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ஹரிமாவ் முடா அணியின் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு பந்தை வெளியேற்றினார்.

87வது நிமிடத்தில் மொஹமட் பைசலின் பாஸை சாதகமாகப் பயன்படுத்தி மூன்றாவது கோலைப் போட்டு அணியின் வெற்றியை ஓரோஸ்கோ உறுதி செய்த பிறகு, டான் செங் ஹோவின் சிலாங்கூர் அரையிறுதிக்கு முன்னேறியது.

நேற்று 27 மே 2023 அன்று பரோய், துவாங்கு அப்துல் ரஹ்மான் ஸ்டேடியத்தில் சிலாங்கூர் எஃப்சி மற்றும் நெகிரி செம்பிலான் எஃப்சி இடையேயான FA கோப்பை காலிறுதி ஆட்டத்தில், சிலாங்கூர் 3-1 என வெற்றி பெற்றது.

 

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.