NATIONAL

வெப்ப வானிலை- கோலகிராய், ரவுப் உள்ளிட்ட ஐந்து இடங்களில் எச்சரிக்கை அளவை எட்டின

26 மே 2023, 4:15 AM
வெப்ப வானிலை- கோலகிராய், ரவுப் உள்ளிட்ட ஐந்து இடங்களில் எச்சரிக்கை அளவை எட்டின

கோலாலம்பூர், மே 26- தீபகற்ப மலைசியாவில் நான்கு பகுதிகளிலும் சரவாக்கில் ஒரு பகுதியிலும் நேற்று முதல் நிலை வெப்ப வானிலை நிலையை (முன்னெச்சரிக்கை) மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

வானிலை ஆய்வுத் துறை தனது பேஸ்புக் பதிவில் நேற்று மாலை 4.30 மணிக்கு

வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி தீபகற்ப மலேசியாவின் கிளந்தான்

மாநிலத்தின் பாசிர் மாஸ், கோல கிராய், பகாங்கில் உள்ள ரவுப் மற்றும் பெந்தோங் ஆகிய

பகுதிகளில் இந்த வெப்ப வானிலை பதிவாகியுள்ளது.

சரவாக்கில் முதல் கட்ட வெப்ப நிலையில் இருக்கும் பகுதியாக செலாங்காவ் விளங்குகிறது. முன்னெச்சரிக்கை நிலை என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு நீடிக்கக்கூடிய 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையைக் குறிக்கும்.

தினசரி வெப்ப வானிலை நிலை குறித்த சமீபத்திய தகவலை https://www.met.gov.my/iklim/status- cuaca-panas/  என்ற அகப்பக்கம் வாயிலாகப் பெறலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.