NATIONAL

தேசிய தின சின்னம், கருப்பொருள் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை மூன்று இடங்களில் நடைபெறும்

25 மே 2023, 9:21 AM
தேசிய தின சின்னம், கருப்பொருள் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை மூன்று இடங்களில் நடைபெறும்

ஷா ஆலம், மே 25- இவ்வாண்டு தேசிய தினத்திற்கான சின்னம் மற்றும் கருப்பொருள் வரும் சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மூன்று இடங்களில் ஏக காலத்தில் வெளியிடப்படும்.

கோலாலம்பூர், தாமான் கே.எல்.சி.சி. எக்ஸ்ப்லெனட், சரவாக் மாநிலத்தின் கூச்சிங் நகரில் உள்ள பெத்ராஜெயா மைடின் பேரங்காடி மற்றும் சபா மாநிலத்தின் கோத்தா கினபாலு, போர்னியோ ஹைப்பர்மால் ஆகியவையே அந்த மூன்று இடங்களாகும்.

இந்த நிகழ்வை பொது மக்கள் ஆர்.டி.எம். டிவி ஒன்றின் மூலம் நேரடியாக கண்டு களிக்கலாம் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சு கூறியது.

இந்த நிகழ்வுக்கு நேரடியாக வர முடியாதவர்கள் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு, மலேசிய தகவல் இலாகா மற்றும் மெர்டேக்கா 350 பேஸ்புக் வாயிலாக அஞ்சல் செய்யப்படும் நேரடி ஒளிபரப்பையும் கண்டு களிக்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.