NATIONAL

திவாலாகும் தரப்பினரில் 35 முதல் 44 வயது வரையிலானோரே அதிகம்- மக்களவையில் தகவல்

24 மே 2023, 9:55 AM
திவாலாகும் தரப்பினரில் 35 முதல் 44 வயது வரையிலானோரே அதிகம்- மக்களவையில் தகவல்

ஷா ஆலம், மே 24- திவாலானவர்களில் அதிகமானோர் 35 முதல் 44

வயதுக்குட்பட்டோராக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த

2019ஆம் ஆண்டு முதல் இதுவரை திவாலானவர்களில் 13,073 பேர் இந்த

வயதுக்குட்பட்டவர்களாவர்.

இக்காலக்கட்டத்தில் 55 வயதுக்கும் மேற்பட்ட 5,297 பேரும் 25 வயதுக்கும்

கீழ்ப்பட்ட 107 பேரும் திவாலானதாக பிரதமர் துறை அமைச்சர் (சட்டம்

மற்றும் நிர்வாக முறை சீர்திருத்தம்) டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான்

கூறினார்.

இக்காலக்கட்டத்தில் மிக அதிகமான ஆண்கள் அதாவது 25,104 பேர்

திவாலான வேளையில் பெண்களின் எண்ணிக்கை 8,912ஆக இருந்தது

என்று அவர் தெரிவித்தார்.

இன ரீதியாக பார்க்கையில் மலாய்க்காரர்களே அதிகம் திவாலானார்கள்.

திவால் பட்டியலில் சேர்க்கப்பட்ட மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 19,791

ஆகும் என அவர் குறிப்பிட்டார்.

மக்களையில் இன்று 2023ஆம் ஆண்டு திவால் சட்டத்திருத்த மசோதா

மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர்

இதனைக் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.