NATIONAL

எவரெஸ்ட் உட்பட்ட உலகின் ஏழு மலைகளின் உச்சியை அடைந்து நாகராஜன் சாதனை

23 மே 2023, 4:53 AM
எவரெஸ்ட் உட்பட்ட உலகின் ஏழு மலைகளின் உச்சியை அடைந்து நாகராஜன் சாதனை

கோலாலம்பூர்,  மே 23 -   எவரெஸ்ட் மலையின் உச்சியைத் தொட்டதன் மூலம் உலகில்  ஏழு உயரமான மலைகளை  ஏறிய இரண்டாவது மலேசியர் என்ற பெருமையை  ஆர்.ஜே. நாகராஜன் பெறுகிறார்.

ஐம்பத்தொன்பது வயதுடைய நாகராஜன் உள்ளூர் நேரப்படி காலை மணி 10 .30 அளவில்

அதாவது   மலேசியா நேரப்படி  நேற்று நண்பகல்   12.45 மணியளவில் எவரெஸ்ட்  மலையை வெற்றிகரமாக ஏறியதாக   ஜீரோ டு 8000 எனும் மலையேறும் அமைப்பின் நிறுவனரான காஃபிஷ் பாச்சோக்  தெரிவித்தார்.

மலையேறுபவர்களின்  உச்சபட்ச வெற்றி என்பது 8,848 மீட்டர் உயரம் கொண்ட    எவரெஸ்ட் மலையின் உச்சியை தொடுவதுதான். அந்த சாதனையை  நாகராஜன்  அடைந்துவிட்டார்  என அவர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கு முன் டத்தோ முகமது முஹபர்டின் என்பவர்    உலகின் ஏழு உயரமான

மலைகளையும் ஏறிய முதல சாதனையாளர் என்ற பெருமையை  பெற்றிருந்தார்.

தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிக்கா,

ஆஸ்திரேலியா ஆசிய ஆகிய கண்டங்களில் உள்ள ஏழு உயர்ந்த மலைகளை

ஏறியதன் வழி நாகராஜன் இந்த சாதனையைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.