NATIONAL

2026ஆம் ஆண்டு முதல் பள்ளித் தவணை ஜனவரியில் தொடங்கும்

23 மே 2023, 4:50 AM
2026ஆம் ஆண்டு முதல் பள்ளித் தவணை ஜனவரியில் தொடங்கும்

ஷா ஆலம், மே 23- பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பதைப் போல் வரும்

2026ஆம் ஆண்டு முதல் புதிய பள்ளித் தவணை ஜனவரியில் தொடங்கும்

என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

வரும் 2024/2025 பள்ளித் தவணையை 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்

தொடங்குவதற்கு ஏதுவாக கல்வி அட்டவணையைத் தயாரிக்கும்

நடவடிக்கையில் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆகவே, பள்ளித் தவணை ஜனவரி மாதம் தொடங்கப்பட வேண்டும் என்ற

பொது மக்களின் எதிர்பார்ப்பு வரும் 2026ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என

அவர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

பள்ளிகளில் புதிய கல்வித் தவணை பழையபடி ஜனவரி மாதத்திற்கு

கொண்டு வரப்படும் என கல்வியமைச்சு முன்னதாக கூறியிருந்தது.

எனினும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு கால அவகாசம்

தேவைப்படுகிறது என அது குறிப்பிட்டிருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.