NATIONAL

கெடா மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் இயக்குனர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தின் போது இறந்தார்

20 மே 2023, 11:56 AM
கெடா மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் இயக்குனர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தின் போது இறந்தார்

கோலாலம்பூர், மே 20: கெடா மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அவாங் அஸ்கண்டார் அம்புவான் யாக்கூப் (56), எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தின் போது இறந்துள்ளார்.

மலேசிய எவரெஸ்ட் 2023 (ME 2023) தலைமை நிர்வாகி தான் ஸ்ரீ டாக்டர் சலே முகமட் நோரிடம் இருந்து தகவலைப் பெற்ற பிறகு மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமை ஆணையர் அமினுர்ரஹீம் முகமட் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

"இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்" என்று அவர் நேற்று இரவு ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தொடங்கிய இந்த பணியில் 2016 ஆம் ஆண்டு எவரெஸ்ட் மலையை ஏறிய அசிம் அஃபிஃப் இஷாக், முகமட் ஹவாரி ஹாஷிம் மற்றும் வின்சென்ட் தியோங் லிங் யாங் ஆகியோரும் இணைந்தனர்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.