NATIONAL

ஆற்றில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

20 மே 2023, 9:17 AM
ஆற்றில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

பாசிர் குடாங், மே 20: நேற்றிரவு பண்டார் ஶ்ரீ ஆலம், ஸ்ரீ இன்தான் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள மாசாய் ஆற்றில் தவறி விழுந்து இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் முகமது டேனிஷ் அகமட் (11) மற்றும் ஜாஹிர் அஜ்மல் முகமட் இட்ரிஸ் (13) என அடையாளம் காணப்பட்டதாகப் பாசிர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) செயல்பாட்டுத் தலைவர் உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் சர்ஹான் அக்மல் முகமட் தெரிவித்தார்.

"தேடல் மற்றும் மீட்பு குழுவினரால் முகமட் டேனிஷின் சடலம் காலை 5.06 மணிக்கு வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் ஜாஹிர் அஜ்மலின் சடலம் காலை 7.38 மணி அளவில் நீரில் மூழ்கியதாக நம்பப்படும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நீரின் ஆழம் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

"அந்த இருவரின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் காலை 8.33 மணியளவில் தேடுதல் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.