NATIONAL

ஜூன் மாதம் சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவில் பினாங்கு உறுதியாக உள்ளது

19 மே 2023, 9:06 AM
ஜூன் மாதம் சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவில் பினாங்கு உறுதியாக உள்ளது

ஜோர்ஜ் டவுன், மே 19- மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வரும்

ஜூன் மாதம் சட்டமன்றத்தைக் கலைப்பதென தொடக்கத்தில் எடுத்த

முடிவில் பினாங்கு அரசு உறுதியாக உள்ளது.

அந்த திட்டத்தின்படி ஜூன் மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது

வாரத்தில் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர்

சௌ கூன் இயோ கூறினார்.

ஜூன் மாத த்தின் கடைசி இரு வாரத்தில் தங்கள் சட்டமன்றங்களைக்

கலைக்க இதர ஐந்து மாநிலங்களான சிலாங்கூர், கெடா, கிளந்தான்,

திரங்கானு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் இணக்கம்

கண்டிருந்ததாக பினாங்கு மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான

அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் கருத்தில் கொள்வதற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும்

சொந்த காரணங்கள் உள்ளன. மேலும் மாநில அரசுகளின் நிகழ்ச்சி

நிரல்களை பொறுத்தும் இந்த முடிவு அமைகிறது என்றார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.