NATIONAL

சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் பயணி இறந்தார்

19 மே 2023, 3:52 AM
சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் பயணி இறந்தார்

டுங்கூன், மே 19: இன்று அதிகாலை புக்கிட் பெசி, அஜில் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (எல்பிடி) 2இன் கிலோமீட்டர் 375 இல் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் பயணி இறந்தார், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாலை 5.16 மணிக்கு அழைப்பு கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்..

30 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் மோதி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.

"காயமடைந்தவர்கள் EMRS இயந்திரம் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர். அதே நேரத்தில் இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று தீயணைப்பு வீரர் கூறினார்.

இதற்கிடையில், டுங்கூன் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பரின்டெண்டன்ட்  பஹாருடின் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டபோது இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.