NATIONAL

சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

18 மே 2023, 8:21 AM
சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் மாலை வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், மே18: சிலாங்கூரில் உள்ள உலு லங்காட், கோலா லங்காட் மற்றும் சிப்பாங்

ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

என்று கணிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய

இடங்களிலும் இதே வானிலைதான் ஏற்படக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்

துறை (மெட்மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப் படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு

என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.