NATIONAL

பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு வெள்ளியன்று நடைபெறும்

17 மே 2023, 7:09 AM
பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு வெள்ளியன்று நடைபெறும்

ஷா ஆலம், மே 17- வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நோன்புப்

பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்கும்படி பொது மக்களுக்குப்

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த உபசரிப்பு பெட்டாலிங் ஜெயா, செக்சன் 52, ஜாலான் யோங் சுக்

லின்னில் உள்ள லாமான் எம்.பி.பி.ஜே. சதுக்கத்தில் இரவு 7.45 மணி

தொடங்கி 11.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின்

தகவல் தொடர்புப் பிரிவு கூறியது.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் வாட்டிய ஆட்டிறைச்சி, சாத்தே

ரெண்டாங், ஐஸ்கிரீம், லக்சா சரவாக், டோடோல், செண்டோல்,

பலகாரங்கள் உள்ளிட்ட பதார்த்தங்கள் விருந்தினர்களுக்காக ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் சிறார்களுக்குப் பெருநாள் ரொக்க

அன்பளிப்பு வழங்கப்படும். இதில் கலந்து கொள்வோர் பெருநாள் புத்தாடையுடன் வரும்படி அது கேட்டுக் கொண்டது.

கலைநிகழ்ச்சியுடன் கூடிய இந்த விழாவில் சுமார் 7,000 பேர் கலந்து

கொள்வர் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மாநகர் மன்றம் கூறியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.