NATIONAL

மிட்வேலி மெகாமால் டி.என்.பி. துணை மின் நிலையத்தில் தீ விபத்து

17 மே 2023, 4:58 AM
மிட்வேலி மெகாமால் டி.என்.பி. துணை மின் நிலையத்தில் தீ விபத்து

கோலாலம்பூர், மே 17- இங்குள்ள மிட்வேலி மெகாமால் பேரங்காடியில்

இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.

அந்த பிரசித்தி பெற்ற வர்த்தக மையத்திலிருந்து அடத்தியான கரும்புகை

எழுவதைச் சித்தரிக்கும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில்

பரவலாகப் பகிரப்பட்டன.

அந்த பேரங்காடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதை கோலாலம்பூர் தீயணைப்பு

மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியதாக ஊடகச்

செய்திகள் கூறுகின்றன.

அங்குள்ள தெனாகா நேஷனல் நிறுவனத்தின் (டி.என்.பி.) துணை மின்

நிலையத்தில் தீ ஏற்பட்டதாகக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில்

விரைவில் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.