NATIONAL

மழலையர் காப்பத்தில் குழந்தை சித்ரவதை- பெண்மணிக்குப் போலீஸ் வலைவீச்சு

16 மே 2023, 4:35 AM
மழலையர் காப்பத்தில் குழந்தை சித்ரவதை- பெண்மணிக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜொகூர் பாரு, மே 16- இங்குள்ள முத்தியாரா ரினியில் உள்ள மழலையர்

காப்பகத்தில் குழந்தை ஒன்று சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்

தொடர்பில் பெண்மணி ஒருவரை போலீசார் விசாரணைக்காக தேடி

வருகின்றனர்.

வாட்ஸ்ஆப் புலனம் மூலம் பெறப்பட்ட காணொளி ஒன்றின்

அடிப்படையில் பொது மக்களிடமிருந்து இச்சம்பவம் தொடர்பான புகாரைத்

தாங்கள் பெற்றதாக இஸ்கந்தார் புத்ரி மாவட்ட ப்போலீஸ் தலைவர் ஏசிபி

ரஹ்மாட் அரிபின் கூறினார்.

வயது உறுதிப்படுத்தப்படாதக் குழந்தையிடம் பெண்மணி ஒருவர்

கடுமையாக நடந்து கொள்வதை அந்த காணொளி சித்தரிப்பதாக அவர்

சொன்னார்.

முத்தியாரா ரினி பகுதியிலுள்ள குழந்தை பராமரிப்பு மையம் ஒன்றில்

இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதை தொடக்கக் கட்ட விசாரணை காட்டுகிறது

என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவும்

பொருட்டு மாவட்டப் போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு

அவர் கேட்டுக் கொண்டார்.

அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் பெண்மணி ஒருவர் கடுமையாக

நடந்து கொள்வதை சித்தரிக்கும் இரு காணொளிகள் வாட்ஸ்ஆப் புலனம்

மூலம் நேற்று பகிரப்பட்டன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.