ஈப்போ மே 13- பேராக் ஈப்போ இண்ட்ரா முலியா அரங்கில் நடைபெறும் அனைத்துலக ஒக்கினாவா கோஜூ ரியோ கராத்தே போட்டிக்கு மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் 50,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.பேராக் மாநில கராத்தே சங்கம் மற்றும் மலேசிய ஒக்கினாவா கோஜூ ரியோ கராத்தே கூட்டமைப்பு ஏற்பாட்டில் 19ஆவது அனைத்துலக கராத்தே போட்டியை மனிதவள அமைச்சர் சிவகுமார் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல நாடுகளில் இருந்து 1,300 கராத்தே விளையாட்டாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த முறை இந்த போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவராக நான் இருந்தேன்.
இம்முறை மனிதவள அமைச்சர் என்ற முறையில் உலக கராத்தே போட்டியைத் தொடக்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் இந்த உலக கராத்தே போட்டி வெற்றி பெறுவதற்கு மனிதவள அமைச்சு சார்பில் 50,000 வெள்ளியை ஏற்கனவே வழங்கி விட்டேன் என்று பலத்த கரவொலிக்கிடையே அவர் அறிவித்தார்.
ANTARABANGSA
ஈப்போவில் நடைபெறும் உலக கராத்தே போட்டிக்கு அமைச்சர் சிவகுமார் வெ.50,000 நன்கொடை
13 மே 2023, 7:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
பியர்லி டான்-எம்.தீனாஇப்போது உலக தர நிர்ணயத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். .
n.pakiya
29 ஜூலை 2025

sukankini
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 9 வது நாளான நேற்று பதக்க பட்டியலில் அமெரிக்கா முன்னணி
Shalini Rajamogun
5 ஆகஸ்ட் 2024

selangor
உலு கிள்ளான், யூகே பெர்டானா வில் உள்ள கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையின் (EKVE) உயர்த்தப்பட்ட யூ-திருப்ப பாதை திறக்கப் பட்டு விட்டது.
Pakiya
14 பிப்ரவரி 2026

antarabangsa
இந்தியாவுக்கு 25 விழுக்காடு வரி விதிப்பு
Shalini Rajamogun
31 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




