NATIONAL

பள்ளி கணினி அறையில் தீ விபத்து

12 மே 2023, 11:15 AM
பள்ளி கணினி அறையில் தீ விபத்து

கோலாலம்பூர், மே 12: இங்குள்ள தாமான் யார்ல் இடைநிலைப்பள்ளியில் ``(SMK)

Taman Yarl`` கணினி அறை தீப்பிடித்தது.

இன்று காலை 7.26 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அவசர அழைப்பு

வந்ததாகவும், உடனே ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் செபூத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு

நிலையங்களைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும்

கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

20 × 20 அடி உள்ள அக்கணினி அறையில் தீ விபத்து ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.

காலை 7.42 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்தால் அறையின் 60 சதவிகிதம் அழிந்துவிட்ட நிலையில் எந்த உயிர் சேதமும்

ஏற்படவில்லை. இத் தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது; என்று

செய்தித் தொடர்பாளர் கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.