MEDIA STATEMENT

பேரா சுல்தானுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் பெண் தடுத்து வைப்பு

7 மே 2023, 4:13 AM
பேரா சுல்தானுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் பெண் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், மே 7- பேரா சுல்தானுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை காணொளி வாயிலாக சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் நகரைச் சேர்ந்த அந்த 34 வயது பெண் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 117 வது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர் ஷியா சாடுடின் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் டி 5 எனப்படும் வகைப்படுத்தப்பட்ட குற்ற விசாரணை பிரிவு விசாரித்து வருவதாக அவர் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

அவதூறான கருத்துகள் அடங்கிய அந்த காணொளியை அப்பெண் தனது டிக் டாக் செயலி மூலம் கடந்த திங்கட்கிழமை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.