EKSKLUSIF

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் நாளை நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு

5 மே 2023, 10:38 AM
செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் நாளை நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு

கிள்ளான், மே 5- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நாளை மே 6 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த மடாணி பொது உபசரிப்பு தாமான் செந்தோசா, கிள்ளான் நகராண்மைக் கழக (எம்.பி.கே.) மண்டபத்தில் நண்பகல் 12.00 முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

இந்த தொகுதியில் மூன்று இடங்களில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேளையில் அதன் தொடக்க மற்றும் பிரதான நிகழ்வு நாளை நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார்.

வரும் மே 13ஆம் தேதி நண்பகல்  12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தாமான் மஸ்னா பாசார் மாலாம் வளாகத்திலும் மே 21 ஆம் தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பண்டார் பொட்டானிக், டேவான் பள்மா பொட்டானிக்கிலும் மற்ற இரு நிகழ்வுகளும் நடத்தப்படும் என்று இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான அவர் சொன்னார்.

மதிய விருந்துடன் கூடிய இந்த பொது உபசரிப்பில் கலந்து சிறப்பிக்கும் படி தொகுதி மக்களை குணராஜ் கேட்டுக் கொண்டார்.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.