MEDIA STATEMENT

மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்- பூலாவ் இண்டாவில் சம்பவம்

28 ஏப்ரல் 2023, 4:05 AM
மின்சாரம் தாக்கி ஆடவர் மரணம்- பூலாவ் இண்டாவில் சம்பவம்

ஷா ஆலம், ஏப் 28- மின்சாரம் தாக்கிய ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் இங்கள்ள் லகுவான பார்க் பூலாவ் இண்டா சுரங்கப் பாதையில் நேற்று மாலை நிகழ்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 4.04 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் மோர்னி மாமாட் கூறினார்.

பத்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த போதிலும் அந்த சுரங்கப் பாதையில் மின்கசிவு காணப்பட்டதால் தெனாகா நேஷனல்  பணியாளர்களின் வருகைக்காக தாங்கள் காத்திருக்க நேர்ந்ததாக அவர் சொன்னார்.

அங்கு வந்த தெனாகா நேஷனல் பணியாளர்கள் இரவு மணி 11.45 மணியளவில் 33 கிலோவாட் சக்தி கொண்ட மின் விநியோகத்தை துண்டித்ததைத் உயிரிழந்த நபரின் உடலை மண்வாரி இயந்திரத்தின் உதவியுடன் அந்த சுரங்கப்பாதையிலிருந்து தாங்கள் மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முப்பது வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலம் மேல் நடவடிக்கைக்காக பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார் அவர். 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.