NATIONAL

குடும்பத்துடன் குளித்து கொண்டிருந்த பெண் நீரில் மூழ்கி இறந்தார்

27 ஏப்ரல் 2023, 3:53 AM
குடும்பத்துடன் குளித்து கொண்டிருந்த பெண் நீரில் மூழ்கி இறந்தார்

பண்டார் பெர்மைசூரி, ஏப்.27: நேற்று மதியம் 12.15 மணியளவில், கம்போங் உலு செலாடாங், லதா சங்கா எனும் இடத்தில் குடும்பத்துடன் குளித்து கொண்டிருக்கும் போது இளம்பெண் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார்.

19 வயதான நோர் ஆலியா ஃபர்ஹானா மாட் ஜைத், அவரின் உறவினர்களுடன் குளிந்த கொண்டிருக்கும் வேளையில் கால் வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்தார்.

செதியு மாவட்டக் காவல்துறைத் தலைவர் டிஸ்பி அவ்வன்டி ஊசின் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் மற்ற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் அவரது மாமாவால் வெற்றிகரமாகக் கரைக்கு கொண்டு வரப்பட்டார்.

குடும்ப உறுப்பினர்கள் பின்னர் உதவிக்காகக் காவல்துறையை அழைத்தனர். மதியம் 1.55 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி மருத்துவ அதிகாரி, நோர் ஆலியா ஃபர்ஹானா இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார்.

"அவரின் உடல் மேல் பரிசோதனைக்காக செத்யு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீர் நிலைகள் அல்லது வேறு இடங்களில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எப்போதும் கவனமாக இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொதுமக்களை காவல்துறை அறிவுறுத்துகிறது," என்றார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.