NATIONAL

சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை

25 ஏப்ரல் 2023, 9:20 AM
சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 25: சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இன்று இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அவை கோலா சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும். புத்ராஜெயா மற்றும் மலாக்கா ஆகிய இடங்களிலும் இதே வானிலைதான் இருக்கக்கூடும் என்று ட்விட்டர் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகாங் (லிபிஸ், ரவூப், ஜெராண்டுட், தெமர்லோ), நெகிரி செம்பிலான் (சிரம்பான், போர்ட் டிக்சன், ரெம்பாவ்), ஜொகூர் (தங்காக், செகமாட், மூவார், பத்து பஹாட், குளுவாங்), சபா (தம்புனான்), மேற்கு கடற்கரை மற்றும் தவாவ் (தவாவ்) ஆகிய பகுதிகளிலும் கனத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.