MEDIA STATEMENT

ஏப்.28 முதல் சிலாங்கூரின் அனைத்து மாவட்டங்களிலும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு

24 ஏப்ரல் 2023, 2:28 AM
ஏப்.28 முதல் சிலாங்கூரின் அனைத்து மாவட்டங்களிலும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு

ஷா ஆலம், ஏப் 24- இம்மாதம் 30ஆம் தேதி கிள்ளானில் நடைபெறவிருக்கும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் மேன்மை தங்கிய சிலங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கலந்து கொள்வார்.

கிள்ளான், தாமான் ஸ்ரீ கெராயோங் திடலில் நடைபெறவிருக்கும் இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநிலத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வு வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் ஷவால் மாதம் முழுவதும் நடைபெறும். இதன் தொடக்க நிகழ்வு வரும் 28ஆம் தேதி சிப்பாங், பெக்கான் சாலாக் திங்கி, பாசார் பாகி வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் 29ஆம் தேதி உலு சிலாங்கூர் மாவட்டத்தின் உலு பெர்ணமில் உள்ள பொது மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.  இதன் அடுத்த நிகழ்வு மே 5ஆம் தேதி உலு லங்காட் தாமான் ஸ்ரீ நண்டிங் இரவுச் சந்தை நடைபெறும்  இடத்தில் நடக்கும்.

பெட்டாலிங் மாவட்ட நிலையிலான பொது உபரிப்பு சுங்கை பூலோ பாசார் மாலாம் பகுதியில் மே 6ஆம் தேதியும் கோல லங்காட் மாவட்டத்தின் தாமான் பெர்வீரா சிஜங்காங்கில் மே 7ஆம் தேதியும் நடைபெறும்.

சபாக் பெர்ணத்தின் பாரிட் பாரு, டத்தாரான் தானா லெசேனில் மே 12ஆம் தேதியும் கோல சிலாங்கூர் புக்கிட் பெடோங் பொது மைதானத்தில் மே 13ஆம் தேதியும் இந்த உபசரிப்பு நடைபெறவிருக்கிறது.

கோம்பாக் ஆப்டவுன் வளாகத்தில் மே 14ஆம் தேதி நடைபெறும் கோம்பாக் மாவட்ட நிலையிலான நோன்பு பெருநாள் பொது உபசரிப்புக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருகை புரிவார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.