NATIONAL

நான்கு பேர் கொண்ட மோசடி கும்பல் கைது

20 ஏப்ரல் 2023, 5:33 PM
நான்கு பேர் கொண்ட மோசடி கும்பல் கைது

பாலிக் புலாவ், ஏப்ரல் 20: ஒருவருக்கு RM47,006 இழப்பை ஏற்படுத்திய முதியவர் உட்பட நான்கு பேரைக் கொண்ட மோசடி கும்பலைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

தென்மேற்கு மாவட்டத் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 25 முதல் 68 வயதுடைய அந்த நான்கு பேர் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரைச் சுற்றி தென்மேற்கு மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனர்.

"விசாரணையின் முடிவில் அவர்கள் டச் என் கோ அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியில் ஈடுப் பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

2001, 2022 மற்றும் 2023இல் பதிவான வழக்குகளில் பாதிக்கப் பட்டவரின் மொத்த இழப்பு RM300 முதல் RM47,006 வரை இருக்கும்" என்று அறிக்கை கூறுகிறது.

விசாரணைக்கு உதவ அவர்கள் நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர் மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.