NATIONAL

தஞ்சோங் காராங் நகரப் பாலம் பயன்படுத்த பாதுகாப்பானது

20 ஏப்ரல் 2023, 5:25 PM
தஞ்சோங் காராங் நகரப் பாலம் பயன்படுத்த பாதுகாப்பானது

ஷா ஆலம், ஏப்ரல் 20: தஞ்சோங் காராங் நகரப் பாலத்தில் விரிசல் இல்லை என்றும், பொதுமக்கள் பயன்படுத்த பாதுகாப்பானது என்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட பொதுப்பணித்துறை (ஜேகேஆர்) உறுதி செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாலத்தில் கூறப்படும் எந்த விரிசலும் ஏற்படவில்லை என்பது விசாரணை மற்றும் ஆய்வில் கண்டறியப் பட்டதாக முகநூலில் ஓர் அறிக்கையில் பொதுப்பணித்துறை விளக்கமளித்தது.

"எனவே, பாலம் பயன்படுத்த பாதுகாப்பானது என்று இந்த துறை தெரிவித்தது. மேலும், இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து காவல்துறையில் அறிக்கையையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (SKMM) புகார் அளித்துள்ளதாகவும், பொய்யான தகவலைப் பரப்பிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுப்பணித் துறை மேலும் கூறியது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட பாலம் விரிசல் மற்றும் பயன்படுத்த பாதுகாப்பற்றது என்று கூறி ஓர் ஆடியோ பதிவு வைரலாக பரவியது. இது பயனர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.